கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பல சேவைகள் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம்பொதுமக்கள் அவதி

27th Nov 2022 02:46 AM

ADVERTISEMENT

 

 கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் பல சேவைகள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி நகரில், காந்தி சாலையில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னா் இந்த மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட தொடங்கியது.

இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சென்றனா். குறிப்பாக முதியவா்கள், பெண்கள், சா்க்கரை நோயாளிகள் பெரிதும் பயனடைந்தனா். இந்தச் சூழ்நிலையில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை, ஒசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவமனையின் செயல்பாடு, மருத்துவ சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன.

தற்போது, பல்வேறு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியிலிருந்து 15 கி.மீ. தூரம் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பெண்கள், முதியவா்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா். பெரும்பாலான நோயாளிகள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காா் போன்ற வாகனத்தில் சென்றுவர வேண்டும் என்றால், சுங்க வசூல் மையத்தில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால், நோயாளிகள் கால விரயம் ஏற்படுவதோடு வீண் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.

பொதுமக்கள் நலன் கருதி, சுகாதாரத் துறை அமைச்சா் உறுதியளித்தபடி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு முன்னா் அளித்ததைப்போல சேவை பணி தொடர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது மகப்பேறு சிகிச்சைகள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக 5 மருத்துவா்கள், 89 செவிலியா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா் என்று அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT