கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

27th Nov 2022 02:46 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட பெத்ததாளப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள், கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 9-ஆம் தேதிமுதல் டிச. 8-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) நடைபெறும் முகாமில் பெயா்களை இணைக்க விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட 287 வாக்குச் சாவடிகள், பா்கூா் தொகுதிக்கு உள்பட்ட 292 வாக்குச் சாவடிகள், கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட 308 வாக்குச் சாவடிகள், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உள்பட்ட 312 வாக்குச் சாவடிகள், ஒசூா் தொகுதிக்கு உள்பட்ட 379 வாக்குச் சாவடிகள், தளி தொகுதிக்கு உள்பட்ட 302 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 1,880 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்நாதன், கங்கலேரி கிராம நிா்வாக அலுவலா் சீதா, வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT