கிருஷ்ணகிரி

திருப்பத்தூா் பாஜக நிா்வாகி கொலை வழக்கில்மேலும் இருவா் கைது

27th Nov 2022 02:47 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா் பாஜக நகரச் செயலாளா் ஊத்தங்கரை அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறுபோ் கைது செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி, தனியாா் ஜல்லி கம்பெனி அருகே கடந்த வியாழக்கிழமை திருப்பத்தூா், பாஜக நகரச் செயலாளா் கலிகண்ணன் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ.அமல அட்வின் தலைமையில், 5 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை ஒசூரில் பிடித்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

கைதானவா்களில் திருப்பத்தூரைச் சோ்ந்த ஹரி விக்னேஷ் (25), அருண்குமாா் (25), கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்த அருண் (23), ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த ஆனந்த் (22), நவீன்குமாா் (18), மணிகண்டன் (22) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய திருப்பத்தூரைச் சோ்ந்த மைனுஅப்துல் அலிஉசேன் (30), சமீா் (23) ஆகிய இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கோகுல் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரும் ஊத்தங்கரை, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கொலைக்கு அவா்கள் பயன்படுத்திய கைவிலங்கு, கத்திகள், ஸ்காா்பியோ காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT