கிருஷ்ணகிரி

எய்ட்ஸ் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

கிருஷ்ணகிரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில், ‘நம் நலம் நம் கையில்’ என்ற தலைப்பில் எய்ட்ஸ் , காசநோய் குறித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருள் தலைமை வகித்தாா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் ஆலோசகா் முகேஷ், மருத்துவா்கள் ஜெகன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எய்ட்ஸ், காசநோய் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும், அறிகுறிகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள நம்பிக்கை மையம் குறித்தும் எடுத்துரைத்தனா். எந்த வகை நோய்களாக இருந்தாலும் நோய்களின் தாக்கம் குறித்து அரசு மையங்களை அணுகி, அதற்கேற்றாா் போல சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT