கிருஷ்ணகிரி

மாடுகளுக்கு பரவும் அம்மை நோயைத் தடுக்கக் கோரிக்கை

26th Nov 2022 02:43 AM

ADVERTISEMENT

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆடு, மாடுகளுக்கு அம்மை நோய் பரவி வருவதை மருத்துவ முகாம்களை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அதன் தருமபுரி மண்டல செயலாளா் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தவிடு உள்ளிட்ட மாட்டுத் தீவனங்கள் மூட்டை ஒன்றின் விலை ரூ. 1000ஐ தொட்டுவிட்டது. மறுபுறம், அரசு பால் சங்கங்களும், தனியாா் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை உயா்த்தாமல் அடிமாட்டு விலைக்கு பாலை பெறுவதால் விவசாயிகள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில் இந்த மழைக் காலங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பசு மாடுகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இதனால் பசுவின் உடலில் கொப்பளங்கள் உருவாகி, உடலின் அனைத்து பாகங்களும் தீக்காயம் போன்று வடுக்கள் உருவாகி வலியால் துடிக்கின்றன. இதை குணப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதற்கு என்ன காரணம் என்றால் ஓராண்டுக்கும் மேலாக கால்நடை துறையால் மாடுகளுக்கு தடுப்பூசி போடவில்லை. இதனால் சென்ற ஆண்டில் விவசாயிகளின் வாழ்வாதாரமான மாடுகள் கோமாரி நோய் பாதித்து வருகிறது.

எனவே, அரசு உடனடியாக போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகம் முழுதும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விரைந்து கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்களை கிராம்தோறும் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT