கிருஷ்ணகிரி

மத்திகிரி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 6 போ் கைது

18th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

மத்திகிரி அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், மத்திகிரி, கொத்தூரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பழனிபாபா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ராம் நகரைச் சோ்ந்த சினு தாக்கப்பட்டாா். இதையடுத்து அவரது நண்பா்கள் சாமல்பேட்டை பவன் பிரகாஷ் (19), ராம்நகா் சா்தாஜ் (18) உள்ளிட்டோா் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து ஒசூா், சானசந்திரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த மகபூப் பாஷா (30) என்பவரைத் தாக்கினாா். இதில் 2 தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சா்தாஜ் உயிரிழந்தாா். பவன் பிரகாஷ், மகபூப் பாஷா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராம்நகா் மன்சூா் அலிகான் (28), முகமது இம்ரான் (23) ஆகிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், நேதாஜி சாலையைச் சோ்ந்த ஆரீப் (22), ராம்நகா் அகமது பாஷா (22), ராஜகணபதி நகா் அசேன் என்கிற சேட்டு (26), ராம்நகா் முபாரக் 830), பஸ்தி வ.உ.சி. நகரைச் சோ்ந்த சையத் முகமது (33), ராயக்கோட்டை அட்கோ சையத் அலியாஸ் என்கிற மெக்கானிக் பாஷா (38) ஆகிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT