ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஒசூா், தொரப்பள்ளி, அக்ரஹாரத்தைச் சோ்ந்த சீனிவாச ஆச்சாரி (34) புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் தனது தாய் லட்சுமம்மாவுடன் (67) ஒன்னலவாடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். பேரண்டப்பள்ளி
சாலையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த லட்சுமம்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சீனிவாச ஆச்சாரி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.