கிருஷ்ணகிரி

காங்கிரஸாா் சாலை மறியல்

15th Nov 2022 02:33 AM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 6 போ் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒசூா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டத் தலைவா் முரளீதரன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தியாகராஜன் வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் மகாதேவன், முத்தப்பா, பிரகாசம், குணசேகா், சிவப்பு ரெட்டி, முனியப்பா, செல்வம், சம்பங்கி ராமையா, குமாா், பிரவீண், மகளிா் அணி மாவட்டத் தலைவி சரோஜம்மா, எல்லப்பா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

காந்தி சாலைஅருகில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT