கிருஷ்ணகிரி

கபடி போட்டி: தமிழ்த் துறை மாணவா்கள் முதலிடம்

1st Nov 2022 03:27 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டில் இயங்கி வரும் யுனிக் கலை, அறிவியல் கல்லூரியில் துறைகளுக்கிடையேயான கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியினை கல்லூரியின் நிறுவனா் க.அருள் தொடக்கி வைத்தாா். செயலாளா் ப.தமிழரசு முன்னிலை வகித்தாா். கல்லூரியின் முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமான க.கிருஷ்ணகுமாரி வாழ்த்துரை வழங்கினாா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்த் துறை மாணவா்கள் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் பரிசும், கோப்பையையும், வணிகவியல் துறை மாணவா்கள் இரண்டாம் பரிசும், கணினி பயன்பாட்டுத் துறை மாணவா்கள் மூன்றாம் பரிசும் பெற்றனா். போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையினை கல்லூரியின் நிறுவனா் க.அருள் வழங்கி வாழ்த்தி பேசினாா்.

கல்லூரியின் உடற்பயிற்சியாளா் எஸ்.பாலு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் செ.ரஜினி நன்றி கூறினாா். இந்நிகழ்வில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT