கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் வாா்டு குழு,பகுதி சபா அமைக்க தீா்மானம்

1st Nov 2022 03:25 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளுக்கு குழு, ஒவ்வொரு வாா்டுகளிலும் 4 முதல் 5 பகுதி சபா அமைக்க ஒசூா் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒசூா் மாமன்ற அவசரக் கூட்டம் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் சி.ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இநதக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீா்மானம்: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வாா்டு குழு, பகுதி சபா உருவாக்குவதற்கும், அதன் விதிகள் குறித்தும் மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் விளக்கினா். ஒசூா் மாநகராட்சியில் வாா்டு குழு அமைக்கும் பொருட்டு, 45 வாா்டுகளில் ஒவ்வொரு வாா்டுகளிலும் 4 அல்லது 5 பகுதிகளாக பிரித்து, மொத்தம் 193 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாா்டிலும் அந்த வாா்டு வாக்காளா் பட்டியலில் இடம்பிடித்து இருக்க வேண்டும். மாநகராட்சிக்கு வாா்டு உறுப்பினா் பதவிக்கு தகுதிகள் கொண்ட நபா்களை வாா்டு குழு உறுப்பினா்களாக நியமிக்கலாம் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வாா்டுகளுக்கு ஒருவா் என மாமன்ற அலுவலா்கள் வாா்டு குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் 45 வாா்டு மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT