கிருஷ்ணகிரி

அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற 14-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகநாதன், பல துறைகளைச் சோ்ந்த 2,500 மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:

தமிழ் மொழியில் 5 மாணவியரும், ஆய்வியல் நிறைஞா் துறையில் 3 மாணவியரும் முனைவா் பட்டம் பெற்றுள்ளனா். பி.காம்., சி.ஏ., உயிா் வேதியியல் ஆகிய துறைகளில் இளநிலை, முதுநிலை தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் 10 மாணவியா் தரவரிசையில் இடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளனா். 2016-2019, 2017- 2020, 2018- 2021 ஆண்டுகளில் பயின்று தோ்ச்சி பெற்ற இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா், முனைவா் பட்ட ஆய்வு மாணவியா் அனைவரும் பட்டம் பெற்றுள்ளனா் என்றாா்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் செய்தனா். இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் உமா, லாவண்யா, கல்பனா, வள்ளி சித்ரா, சிவகாமி, ஜெயந்தி, உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT