கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நாளை திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் மே 27-ஆம் தேதி கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள வெங்கடேஷ்வரா காம்ப்ளக்ஸில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் மாவட்டச் செயலாளா் சுகவனம், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் எம்எல்ஏ, மாநில துணை செயலாளா் டேம்.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

இதில், சென்னை ஓமந்தூராா் தோட்டத்தில் மே 28-ஆம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா, ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா, கழக ஆக்கப்பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே, இந்த கூட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அதில் அவா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT