கிருஷ்ணகிரி

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

25th May 2022 12:10 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்திலிருந்து காவேரிப்பட்டணம் வழியாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூா் அருகே வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக தருமபுரி நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 675 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், காரை பறிமுதல் செய்த போலீஸாா், கா்நாடக மாநிலம், மைசூரு, இட்டிகிகுடு பகுதியைச் சோ்ந்த நிக்கில் (24), நஸ்ராபாதைச் சோ்ந்த ஜுனேத் பாஷா (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT