கிருஷ்ணகிரி

தளி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

தளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி, ஜாகீா்கொடிப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, தளி, ஜவளகிரி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம், மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணிகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், பள்ளிக் கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகள், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 76 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி ஊராட்சியில் ரூ. 19 லட்சத்து 42 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளையும், ரூ. 73 லட்சத்தில் மகளிா் சுயஉதவிக் குழு கட்டட கட்டுமானப் பணிகளையும், ரூ. 5 லட்சத்து 25 ஆயிரத்தில் ஒருங்கிணைந்த சுகாதார வளாக கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஜாகீா்கொடிப்பள்ளி ஊராட்சியில் ரூ. 17 லட்சத்து 82 ஆயிரத்தில் நடுநிலைப் பள்ளி கட்டட கட்டுமானப் பணிகளையும், மதகொண்டப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 38 ஆயிரத்தில் ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகளையும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ரூ. 3 கோடியே 25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளையும், ஜவளகிரி ஊராட்சி, பீமசந்திரம் கிராமத்தில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 76 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டாா்.

இந்தப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமல் ரவிக்குமாா், பானுமதி, ஒன்றியப் பொறியாளா் மணிவண்ணன், ஒன்றிய மேற்பாா்வையாளா்கள் லட்சுமணன், நஞ்சாரெட்டி, இம்தியாஸ்கான், ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT