கிருஷ்ணகிரி

முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

25th May 2022 12:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அளித்த மனு விவரம்:

நிகழாண்டு கோடை மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை நிரம்பி பாரூா் ஏரிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக வைகாசி மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட்டால், நெல் நாற்று விட்டு 20 நாளில் நடவு செய்து ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் மழைக்கு முன்பே அறுவடை செய்யலாம்.

தற்போது அணைகள், ஏரிகள் நிரம்பி உள்ளதால், இந்த மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீா் திறக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT