கிருஷ்ணகிரி

பழங்குடியினா் மீதான வன்முறைகள்தடுப்புச் சட்ட ஆலோசனைக் கூட்டம்

25th May 2022 12:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் அமைச்சகம் சாா்பில், மாற்றுத் திறனாளிகள், இருளா் இன மக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ்பாபு, மறுவாழ்வுத் துறை அலுவலா் குணசேகா், சிறப்பு ஆசிரியா் ஜீவபிரேம், வழக்குரைஞா் சமரசம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் செண்பகவள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், திறன் பயிற்சித் திட்டம், வேலைவாய்ப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், சேவைகள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மீதான வன்முறைகள் தடுப்புச் சட்டம் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாற்றுத் திறனாளிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இருளா் இன மக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT