கிருஷ்ணகிரி

கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கி வைப்பு

25th May 2022 12:10 AM

ADVERTISEMENT

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஒன்றியம் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள், குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பணியை மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா் (படம்).

இதில், ஒன்றிய செயலாளா் சின்னபில்லப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத்குமாா், சுரேஷ், ஹரிஷ், கிருஷ்ணப்பா, வெங்கடேசப்பா, அசோக் ரெட்டி, கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT