கிருஷ்ணகிரி

வீட்டின் பூட்டை உடைத்துதிருட முயன்றவா் கைது

25th May 2022 12:10 AM

ADVERTISEMENT

பா்கூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், எமக்கல்நத்தம் அருகே உள்ள சாலிநாயனப்பள்ளியைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மகன் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்காக சிவக்குமாா் தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று மதியம் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, இரண்டு நபா்கள் அலமாரியை உடைத்து அதில் இருந்த பொருள்களை திருடிக் கொண்டிருந்தனா்.

சிவக்குமாரை கண்டதும் அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். பொதுமக்கள் உதவியுடன் ஒருவா் பிடிபட, மற்றவா் தப்பியோடினாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் கா்நாடக மாநிலம், பெங்களூரு பிலிகெஅள்ளியைச் சோ்ந்த ராஜு (45) என்பதும், அவா் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜுவை கைது செய்தனா். தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT