கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

கல்லாவி ஊராட்சியில் ரூ. 4 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி, அனுமன்தீா்த்தம் அண்ணா நகா் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, மூன்றம்பட்டி ஊராட்சி, வலசை கிராமத்தில் ரூ. 4 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, சிங்காரப்பேட்டை காவல் நிலையம் எதிரில் ரூ. 5 லட்சத்தில் சிறு பாலம், கோவிந்தாபுரம் ஊராட்சி, பால்காரன் கொட்டாய் பகுதியில் ரூ. 3 லட்சத்தில் குழாய், எக்கூா் ஊராட்சி, சாமாட்சி கொட்டாய் கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, கீழ்மத்தூா் ஊராட்சியில் ரூ. 3 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, காரப்பட்டு ஊராட்சி, வளத்தானூா் பகுதியில் ரூ. 8 லட்சத்தில் தாா் சாலை, உப்பாரப்பட்டி ஊராட்சியில் ரூ. 4.50 லட்சத்தில் தாா் சாலை ஆகிய பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

இதில், ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணை செயலாளா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம், ஒன்றிய அவைத் தலைவா்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, தொகுதி செயலாளா் திருஞானம், பஞ்சாயத்து தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT