கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சின்னப்பன் ஏரி 51 ஏக்கா் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி அருகே உள்ள அப்பிநாயக்கம்பட்டி, தாண்டியப்பனூா், எம்ஜிஆா் நகா், பரசுராமன் கொட்டாய், பாரதிபுரம், வண்டிக்காரன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
ஏரியை அருகில் உள்ளவா்கள் ஆக்கிரமித்து வருகின்றனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி கரைகளைப் பலப்படுத்த அளவிடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையா்கள், வருவாய் துறையினா் அளவிடும் பணியில் ஈடுபட்டனா்.