கிருஷ்ணகிரி

கோடை கால கலைப் பயிற்சி நிறைவு

20th May 2022 12:55 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நிறைவு பெற்ற கோடை கால கலைப் பயிற்சி வகுப்பில் 95 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் மே 18-ஆம் தேதி சா்வதேச அருங்காட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கலைப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. நிகழாண்டு மே 16-ஆம் தேதி தொடங்கிய வகுப்பில் ஓவியப் பயிற்சி, களி மண் பொம்மைகள் தயாரிப்பது, யோகாசனம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியை நிறைவு செய்த 95 மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அருங்காட்சியகப் பணியாளா்கள் செல்வம், பெருமாள் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT