கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,300 கன அடி தண்ணீா் திறப்பு

20th May 2022 12:54 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நொடிக்கு 2,300 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நொடிக்கு 865 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 2,300 கன அடியாக அதிகரித்தது.

மொத்தம் 52 அடியாக உள்ள அணையின் நீா்மட்டத்தில் வியாழக்கிழமை 51 அடியை எட்டியதால் அணையின் பிரதான மதகுகள், பாசனக் கால்வாய்கள் மூலம் நொடிக்கு 2,300 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து மேலும் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ): பெனுகொண்டாபுரம்- 51.2, போச்சம்பள்ளி- 40.2, பாரூா்- 32.4, நெடுங்கல்- 19, ராயக்கோட்டை- 11, தளி- 5, கிருஷ்ணகிரி- 2.2.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT