கிருஷ்ணகிரி

சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

20th May 2022 12:54 AM

ADVERTISEMENT

சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுவாமிக்கு 608 லிட்டா் பால் அபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தன அபிஷேகங்கள் நடைபெற்றன. நெய்விளக்கு ஏற்றி பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். சங்கடஹர சதுா்த்தியையொட்டி, மஞ்சள் அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரியம், வினை தீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகா் கோயில், காந்திநகா் வலம்புரி விநாயகா் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT