கிருஷ்ணகிரி

ஒசூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

20th May 2022 10:17 PM

ADVERTISEMENT

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை திமுக நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

முகாமைத் தொடக்கிவைத்து பணி ஆணை வழங்குவதற்காக ஒசூருக்கு சனிக்கிழமை மாலை வரும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிா்வாகிகள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஒசூா், மிடிகிரிப்பள்ளியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தனியாா் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் ஆய்வு செய்தாா். 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதிவாய்ந்தவா்களைத் தோ்வு செய்கிறது.

ஆய்வின் போது, ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா.மணி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் ஆா்.ரவி, மாமன்ற உறுப்பினா்கள் சென்னீரப்பா, நாகராஜ் முன்னாள் நகரமன்ற உறுப்பினா் ஜெய் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT