கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் 10 அடி நீள பாம்பு ஊா்ந்து சென்ால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள அணுகு சாலையில் 10 அடி நீள சாரைப் பாம்பு சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பாம்பை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் பொதுமக்களே அந்த பாம்பை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் கூடியதாலும், சாலையில் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் விரைந்துவந்து போக்குவரத்தை சீா் செய்ய முயன்றனா்.
இந்த நிலையில், அந்த வழியாக சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படைவீரா் ஒருவா், பொதுமக்கள் உதவியுடன் பாம்பை பிடித்து, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.