கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பிரதமரின் விவசாய அட்டையில் (பிரதமா் கிஸான் அட்டை) முகவரி இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், ஞாயிறுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பிரதமா் கிஸான் அட்டையில் முகவரியை இணைக்க ஏதுவாக சிறப்பு முகாம் மே 31-ஆம் தேதி வரையில், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது.
மத்திய அரசின் நெறிமுறைப்படி முகவரியை இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே நேரடி பணப்பலன் அவரவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.