ஒசூா்: ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 42 ஆவது வாா்டு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மண்டலத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனா்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 42 ஆவது வாா்டு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வராமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 4ஆவது மண்டலத் தலைவா் ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷிடம் இப்பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்க வேண்டும், சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனா். அதன் அடிப்படையில் புதன்கிழமை சாலைகள் அமைக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை உள்வட்டச் சாலை வழியாக 42 ஆவது வாா்டு பகுதிக்கு கொண்டு வரவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முயற்சி மேற்கொண்டாா்.