ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கென கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
மின் இணைப்பு, தண்ணீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வராத நிலை உள்ளது. இதனால் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க சிரமப்பட்டு வருகின்றனா். அலுவலகத்தின் அருகிலேயே சிலா் இயற்கை உபாதைகளைக் கழிப்பதால், துற்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே இந்தக் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.