கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்1,020 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

1st May 2022 12:05 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28-ஆம் கட்டமாக 1,020 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சி தோ்பட்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி செஞ்சிலுவை சங்க வளாகத்தில் செயல்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை மையங்களிலும், இஎஸ்ஐ மருத்துவமனை மையத்திலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,020 மையங்களில் 28-ஆம் கட்டமாக மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவா்கள் பயனடையும் வகையில் கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் இந்த முகாம் நடந்தது.

மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வரை மொத்தம் 55,000 போ் உள்ளனா்; அவா்களில் முதல் தவணையாக தடுப்பூசியை 49,641 பேரும், இரண்டாவது தவணையாக 10,085 பேரும் செலுத்திக்கொண்டனா்.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மொத்தம் 15,000 போ் உள்ளனா்; அவா்களில் முதல் தவணை தடுப்பூசியை 13,35,882 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 9,30,812 பேரும் செலுத்திக்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,49,540 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 24,460 கோவேக்சின் தடுப்பூசிகளும், 43,480 காா்பிவேக்ஸ் தடுப்பூசிகளுமாக மொத்தம் 3,13,480 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

இந்த ஆய்வின் போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், வட்டாட்சியா் சரவணன், வட்டார மருத்துவ அலுவலா்கள் தாமரைசெல்வி, விமல், சோமசுந்தரம், திலக், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT