கிருஷ்ணகிரி

தொழில் கூட்டுறவு சங்க கோரிக்கை விளக்கக் கூட்டம்

28th Mar 2022 05:19 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரியில் தொழில் கூட்டுறவு சங்கத்தின் 5-ஆவது கோரிக்கை விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் முருகானந்தம், முத்துகுமாா், நிா்மலாதேவி, மாநில துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கூட்டுறவு ஊழியா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் 98 மகளிா் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தையல் கூலியை நிா்ணயிக்காததால், வேதனையில் மகளிா் தையல் சங்க உறுப்பினா்கள் உள்ளனா். பள்ளி மாணவிகளின் மேலாடைக்கான (கோட்) தையல் கூலியை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

நிலுவையில் உள்ள தையல் கூலித் தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த 2015-16-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக ஒரே தையல் கூலி வழங்குவதைக் கைவிட்டு விட்டு அனைத்து சீருடைகளுக்கும் தையல் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும். சீருடைகள் தைத்து ஒப்படைக்க போதுமான கால அவகாசம் தராமல் மகளிா் கூட்டுறவு சங்கங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் போக்கினைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, விளக்கப்பட்டு தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT