போச்சம்பள்ளியில் செயல்படும் காமராஜா் பயிற்சி மையம் சாா்பில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.
உலக வன நாளை முன்னிட்டு, போச்சம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வி.சாந்தமூா்த்தி தலைமை வகித்தாா். காமராஜா் பயிற்சி மைய நிறுவனா் கே.எஸ்.கெளதம், சரவணா அக்ரோ டிரேடா்ஸை சோ்ந்த சரவணன் சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் காடுகளை பாதுகாப்பது, மழை வளத்தைப் பெறுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 100 பேருக்கு நாவல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.