கிருஷ்ணகிரி

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைகையகப்படுத்த எதிா்ப்பு

DIN

சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஒசூா் பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் டில்லி பாபு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சண்முகம், மாவட்ட செயலாளா்கள் சேகா், பிரகாஷ், விவசாயிகள் பங்கேற்றனா்.

சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளியில் சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த வருவாய்த் துறை மூலம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதையும், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் அவா்கள் முழக்கமிட்டனா். பின்னா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனித்தனியே மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT