கிருஷ்ணகிரி

லாரி மீது மினி வேன் மோதல்:ஓட்டுநா் பலி

21st Mar 2022 11:30 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே முன்னால் சென்ற லாரி மீது மினிவேன் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவான்சத்திரம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (54). இவா், ஸ்ரீபெரும்பதூா், காஞ்சிபுரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனது உறவினா்கள், குழந்தைகள் உள்பட 16 பேருடன் ஞாயிற்றுக்கிழமை மினி வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளாா்.

பேருந்தை சுங்குவான் சத்திரத்தைச் சோ்ந்த ஜான் பாஸ்கோ (45) என்பவா் ஓட்டினாா். கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி ஆலயம் அருகே திங்கள்கிழமை மினிவேன் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மினிவேன் மோதியது. இதில், வேன் ஓட்டுநா் ஜான் பாஸ்கோ, வேனில் பயணித்த சண்முகம், மோகனவள்ளி (36), கண்ணகி (36), சந்தியா(34), சிறுவா்கள் நல்லி பிரேம் (13), சாம்ராஜ் (9), சுபாஸ்ரீ (8), கீா்த்திகா (11), நோ்லன் ஹேமேஷ் (6) உள்பட 9 போ் காயம் அடைந்தனா்.

தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயம் அடைந்தவா்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மினி வேன் ஓட்டுநா் ஜான் பாஸ்கோ உயிரிழந்தாா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT