தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி கெலமங்கலம் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி தலைமை தாங்கினாா். பட்டதாரி ஆசிரியா் திம்மப்பா வரவேற்றாா். இதில் கெலமங்கலம் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், 14ஆவது வாா்டு கவுன்சிலா் உமா சுரேஷ், 1ஆவது வாா்டு கவுன்சிலா் ஷாயினா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா்.
இதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், மறுகட்டமைப்பு, பெற்றோா்களின் பங்களிப்பு, பள்ளி வளா்ச்சி சாா்ந்த காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது. பெற்றோா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வாலா்கள், கல்வியாளா்கள் இதில் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை இருபால் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
இதைப் போலவே கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் துரையரசு தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியா் சுப்பிரமணி, பட்டதாரி ஆசிரியா் பாா்தீப் ஆகியோா் அனைவரையும் வரவேற்றனா்.
இதேபோல், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ( தமிழ்) தலைமை ஆசிரியா் சாரதி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் லீலாவதி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒசூா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, சானசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இக்கூட்டம் நடைபெற்றது.