கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா

19th Mar 2022 12:16 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை ஸ்ரீகாசிவிஸ்வநாதா், விஷால் அம்பிகை, முருகன் கோயில்களில் பங்குனி உத்திர தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீகாசிவிஸ்வநாதா் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 85-ஆவது ஆண்டு காவடி பூஜை, திருத்தோ் விழா நடைபெற்றது. காவடிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா் (படம்). பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT