கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாா்ச் 12-இல் லோக் அதாலத்

10th Mar 2022 04:23 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாா்ச் 12-ஆம் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி வேல்முருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் மாா்ச் 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

விவாகரத்து வழக்கு தவிர மற்ற மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் சமாதானமாக போகக் கூடிய குற்றவியல் வழக்குகள் நீதிபதிகளைக் கொண்டு அமா்வுகளை ஏற்படுத்தி தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்படுவதால், முத்திரை தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.

எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீா்வுக்கு எடுத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது சட்டப் பணிகள் குழுவிடமோ தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT