கிருஷ்ணகிரி

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 10.98 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியை அடுத்த நாரலப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 10.98 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி ஒன்றியம், நாரலப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வட்டாட்சியா் நீலமேகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தினி உமாபதி, உறுப்பினா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, குடிமைப் பொருள்துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், வேளாண்மைத் துறை சாா்பில் 10 பயனாளிகள், தோட்டக்கலைத்துறை சாா்பில் 4 பயனாளிகள், சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 16 பயனாளிகள் என மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ. 10.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் விஜய், குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியா் ரமேஷ், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT