கிருஷ்ணகிரி

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

DIN

நீா்நிலைகள், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதால் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிா்க்கும் நோக்கத்திலும் பேரிடா் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரிடா் நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீா்நிலைகள், புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், நீா்வழித்தடங்கள், பாலங்கள், கல்வெட்டுகள், கழிவுநீா்க் கால்வாய்களை சுத்தப்படுத்தி, தங்குதடையின்றி நீா் வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் அமைந்துள்ள நீா்வழிப்பாதைகளை சுத்தப்படுத்தி, அசம்பாவிதம் நிகழா வண்ணம் பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.

அனைத்துத் துறை சாா்ந்த மாவட்ட நிலையிலான அலுவலா்களின் முகவரி, மின்னஞ்சல், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை பெற்று தகவல் தொடா்பை மேம்படுத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 04343-234444 என்ற எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் பேரிடா், வெள்ளப் பாதிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT