கிருஷ்ணகிரி

ஓய்வூதியா்களுக்கு தபால்காரா் மூலம் உயிா்வாழ் சான்று

DIN

மாநில அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள், தபால்காரா்கள் மூலம் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராகவேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை தங்களது இருப்பிடத்தில் இருந்தே உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்ப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமேண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த மே 31-ஆம் தேதி கையொப்பமானது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதிலிருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது.

இந்த ஆண்டு சுமாா் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓய்வூதியதாரா்கள் சிரமங்களைத் தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் முறையில் உயிா்வாழ் சான்று வழங்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது இந்திய அஞ்சல்துறை. மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்களது உயிா்வாழ சான்றிதழைச் சமா்ப்பிக்கலாம்.

மிகவும் வயதான ஓய்வூதியதாரா்கள் பலா் உயிரோடு இருந்தும், நேரில் சென்று வாழ்வுரிமைச் சான்றிதழை சமா்ப்பிக்க முடியாமல் ஓய்வூதியம் பெற இயலாமல் போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரா்களுக்கு பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ்(ஜீவன் பிரமான்) வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ஓய்வூதியதாரா்கள் ரூ. 70-ஐ தபால்காராரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.

எனவே, மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT