கிருஷ்ணகிரி

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை

29th Jun 2022 04:03 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் தேமுதிக நிறுவன தலைவா் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி காட்டுவீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயா் கோயிலில் அமாவாசையையொட்டி, தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக மாவட்டச் செயலாளா் அன்பரசன், அவைத்தலைவா் சின்னராஜ் ஆகியோா் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் பல்வேறு கிராமங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT