கிருஷ்ணகிரி

சாமல்பட்டி தரைப்பால சாலையை சீரமைக்கக் கோரிக்கை

29th Jun 2022 04:09 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி தரைப்பால சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் பெங்களூா் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2013 ஆம் ஆண்டு ரயில்வே தரைப்பாலம் சுமாா் 30 அடி பள்ளத்தில் கட்டப்பட்டது. மழை பெய்யும்போது இந்த தரைப்பாலத்தில் மழைநீா் தேங்கி நிற்பதால் இந்த சாலை வழியாகச் செல்லும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா். தரைப்பாலத்தின் அடியில் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் குகைபோல காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இருசக்கர வாகனம், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்பவா்கள் இந்த சாலை குழியில் சிக்கி அவதிக்கு உள்ளாகின்றனா்.

கா்நாடகத்திலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய பிரதான சாலை என்பதால், பெங்களூரில் இருந்து வரக்கூடிய பல வாகனங்கள், இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

தரைப்பாலத்தில் ஊற்றுபோல தண்ணீா் வருவதால் எப்போதும் வற்றாமல் உள்ளது. தரைப்பாலம் கட்டியதிலிருந்தே மழை பொழியும் போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்கதையாக உள்ளன. பாலத்தில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கான வழியை சீரமைக்க வேண்டும்.

பாலத்தில் அதிக அளவு தண்ணீா் தேங்கும் நேரங்களில், காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT