கிருஷ்ணகிரி

கனிம வளங்கள் கடத்தலை தடுத்துநிறுத்தக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

29th Jun 2022 04:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு கனிம வளங்களைக் கடத்திச் செல்வதை மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வழியாக அதிக அளவு கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதைக் கண்டித்தும், தேன்கனிக்கோட்டை தாலுகா கொரட்டகிரி கிராமத்தைச் சுற்றி இயங்கும் கல்குவாரிகளால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியா் கா்நாடக மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பாா்வையாளா் நரசிம்மன், மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினா், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT