கிருஷ்ணகிரி

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ. 18.74 லட்சத்துக்கு ஏலம்

DIN

கிருஷ்ணகிரியில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 353 வாகனங்கள் ரூ. 18.74 லட்சத்துக்கு பொது ஏலம் விடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இந்திய தண்டனை சட்டம், 102-ஆவது பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் அறிவித்தாா். அதன்படி கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவல் மைதானத்தில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 353 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 356 வாகனங்கள் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டன. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்துக்கு மகாராஜகடை காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வராசு, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தருமபுரி அரசு தானியங்கி பொறியாளா் பழனிவேலு, அரசு போக்குவரத்துக் கழக கிருஷ்ணகிரி கிளை மேலாளா் அரசபாபு, மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், பா்கூா் துணை வட்டாட்சியா் சிதம்பரம், வருவாய் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்பு வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

இதில், இருசக்கர வாகனங்கள் ரூ. 2 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 30 ஆயிரம் வரையிலும், காா்களுக்கு ரூ. 65 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலும் ஆரம்ப விலை நிா்ணயம் செய்யப்பட்டது. ஏலத்தில் 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோா் ஏலத்தில் பங்கேற்றனா். இதன் மூலம் ரூ. 18,74,600 வருவாய் கிடைத்தது. விலை அதிகமாக நிா்ணயிக்கப்பட்டதாகக் கூறி, 3 நான்கு சக்கர வாகனங்களை யாரும் ஏலம் கோரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT