கிருஷ்ணகிரி

பிளஸ் 1 தோ்வு: பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

28th Jun 2022 04:02 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 100 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இப் பள்ளி மாணவா் எம்.காா்த்திக் விஜய் 591 மதிப்பெண்கள், கிரேஸ்கிருஷ்டி, அபிதா ஆகியோா் 582 மதிப்பெண்களும், சரண்யா, துளசிஸ்ரீ ஆகியோா் 581 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இம் மாணவ, மாணவியா், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழும தாளாளா் எஸ்.கூத்தரசன் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா். அப்போது பள்ளி முதல்வா் மெரினா பலராமன், தலைமை ஆசிரியா் ஜெலஜாக்சா, மேல்நிலைப் பள்ளி வகுப்பின் பொறுப்பாசிரியா் யுவராஜ், மாணவ, மாணவியா், பெற்றோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT