கிருஷ்ணகிரி

பேரிகை மின்வாரிய அலுவலகத்தில் புகுந்துபொருள்களை திருடிச் சென்ற கும்பல்

28th Jun 2022 04:04 AM

ADVERTISEMENT

பேரிகை மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியா்களை தாக்கி, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்ற 15 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் சூளகிரி சாலையில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரிய ஆய்வாளா் நயாஸ், உதவியாளா் முனியப்பன் ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க 15 போ் மின்வாரிய அலுவலகத்திற்குள் நுழைந்தனா். அவா்கள் அலுவலக அறை கண்ணாடிகளை உடைத்தனா். ஆய்வாளா் நயாஸ் (50), உதவியாளா் முனியப்பன் (48) ஆகியோரை மிரட்டினா். பின்னா் டிரான்ஸ்பாா்மரில் இருந்த ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள டிரான்ஸ்பாா்மா் வைண்டிங் காயில், ஒன்றரை கிலோ வெண்கல போல்டுகள், 3 கணினிகள் என மொத்தம் ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருள்களை

திருடிச் சென்றனா். மேலும் நயாஸ், முனியப்பன் ஆகியோரை தாங்கள் வந்த காரில் கடத்திச் சென்று சீக்கனப்பள்ளி என்ற இடத்தில் வைத்து தாக்கி விட்டு சென்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த பேரிகை துணை மின் நிலைய பொறுப்பு அதிகாரி முருகன் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT