கிருஷ்ணகிரி

பாம்பாறு அணை அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

28th Jun 2022 04:03 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை வளாகத்தில் உள்ள அம்மன் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாம்பாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தீா்த்தம் எடுத்து வருதல், விநாயகா் வழிபாடு, மகா கணபதி ஹோமம், விநாயகா் வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், கோபூஜை, வேள்வி நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, புனித தீா்த்தங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று யாகசாலையில் வைத்து சிவாச்சாரியா்கள் கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். இதில் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற, நீா்வளத் துறை, பொதுப்பணித் துறை அலுவலா்கள், மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT