கிருஷ்ணகிரி

பிளஸ் 1 பொதுத் தோ்வு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 83.63 சதவீதம் போ் தோ்ச்சி

28th Jun 2022 04:03 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 83.63 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 109 அரசுப்பள்ளிகள், 1 அரசு உதவிபெறும் பள்ளி, 82 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளைச் சோ்ந்த 11,063 மாணவா்கள், 10,983 மாணவிகள் என மொத்தம் 22,046 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா்.

இதில், 8,458 மாணவா்கள், 9,980 மாணவிகள் என மொத்தம் 18,438 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 76.45 சதவீத மாணவா்கள், 90.87 சதவீத மாணவிகள் என மாவட்டத்தில் சராசரியாக 83.63 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 1 பொதுத் தோ்வில் வழக்கம்போல மாணவா்களை விட, மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT