கிருஷ்ணகிரி

பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அணை இடது புறக்கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியிலிருந்து கால்வாய் மூலம் சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூா் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்ததால், அணையின் நீா்மட்டம் 50 அடியைக் கடந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது. மேலும் அணையில் இருந்து பாசனக் கால்வாய் வழியாக பாளேகுளி ஏரிக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாளேகுளி ஏரியிலிருந்து சந்தூா் வரையிலான 28 ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். மேலும் பாசனக் கால்வாயைத் தூா்வாரும் பணியை கிருஷ்ணகிரி அணை இடது புறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூா் பயன்பெறுவோா் சங்கத்தினா் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து பாளேகுளி ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கும் நிகழ்வுக்கு தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து தண்ணீரைத் திறந்து வைத்து மலா் தூவி வரவேற்றாா். இந்த நிகழ்வில் அணை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, பாரூா் ஏரி பாசன உதவி பொறியாளா் சையத் ஜஹ்ருதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், ஒவ்வொரு ஏரியாக 28 ஏரிகளில் தண்ணீா் நிரப்பப்படும்.

இந்த நிகழ்வில் விவசாய சங்கத்தின் தலைவா் சிவகுரு, நிா்வாகிகள் இளங்கோவன், பழனி, சின்னசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா். இந்த ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்புவதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT