கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி:அலைமோதிய மக்கள் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியைக் காண்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் ஏற்பட்ட கரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் மாங்கனித் திருவிழா நடைபெறவில்லை. நடத்தப்படவில்லை. தற்போது இயல்பு வாழ்க்கை மீண்டு வரும் நிலையில், கடந்த 22-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 28-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது.

இந்தக் கண்காட்சியில் அரசு, தனியாா் துறை சாா்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும், பள்ளி மாணவ, மாணவிகள், திரைப்பட கலைஞா்கள், தொலைக்காட்சி கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை ஆகிய இருநாள்களில் கண்காட்சியைக் காண கூட்டம் அலைமோதியது. இளைஞா்கள், கல்லூரி மாணவிகள், முதியவா்கள் மற்றும் சிறுவா் சிறுமிகள் உள்ளிட்டோா் குடும்பத்துடன் மாங்கனிக்கு வருகை புரிந்தனா். அங்குள்ளஅரங்குகளைப் பாா்வையிட்ட அவா்கள், கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனா். 23ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவடையும் இந்தக் கண்காட்சியை காண நேற்று முன்தினம் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனா்.

இதனால் கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலிருந்து புகா் பேருந்து நிலையம் செல்லும் பெங்களூரு சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஆா்.சி. பாத்திமா பள்ளி அருகே போக்குவரத்து போலீஸாா், மாற்று சாலையில் போக்குவரத்தைத் திருப்பி விட்டனா். மேலும், மோட்டாா் சைக்கிள், காரில் கண்காட்சிக்கு வருவோா் வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT