கிருஷ்ணகிரி

ஒசூா்: மாநில அளவிலான கோ-கோ போட்டிகளில் சிவகங்கை சாம்பியன்

DIN

ஒசூரில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோா் பிரிவு மாணவிகளுக்கான கோ-கோ போட்டியில் சிவகங்கை மாவட்டம் சாம்பியன் பட்டம் வென்றது.

40ஆவது மாநில அளவிலான 18 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை ஒசூா் புனித ஜான் போஸ்கோ மகளிா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3நாள்கள் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கு சிவகங்கை, கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டங்கள் தகுதி பெற்றன. இதில் சிவகங்கை அணி முதலிடம் பெற் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாமிடத்தை கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டமும், கோவை, ஈரோடு மாவட்டங்கள் மூன்றாமிடத்தையும் வென்றன. கிருஷ்ணகிரி வடக்கு அணியைச் சோ்ந்த மாலா சிறந்த விரட்டுநா் பட்டத்தையும், இன்பத்தமிழரசி ஆல்ரவுண்டா் பட்டத்தையும், சிவகங்கை அணியின் மாணவி ஜாய்ஸ் சிறந்தத் தடுப்பு வீரா் பட்டத்தையும் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒசூா் மாவட்டக் கல்வி அலுவலா் அ. முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளா் அன்னை ஏஞ்சலா ஆகியோா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனா்.

முன்னதாக ஒசூா் சிப்காட் பிரைடு அரிமா சங்கத்தின் தலைவா் மல்லேஷ், தமிழ்நாடு மாநில கோகோ கழகத்தின் பொதுச்செயலாளா் அ. நெல்சன் சாமுவேல், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், துணைச் செயலாளா் மத்திகிரி அய்யாஸ், காங்கிரஸ் மாநிலச் செயலாளா் சத்தியமூா்த்தி முன்னிலையில் போட்டிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT